Failed to connect to MySQL: No such file or directory Barath Socialism Party | BSP India | பாரத் சம உடமை கட்சி | Barath Socialism Party India

கழக கொள்கைகள்

கொள்கைகள் மற்றும்
மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள்

1. மகளிர் சுய ‌உதவி குழுவிற்கு ரூ 2லட்சம் வட்டியில்லா கடன் வசதி சுலப தவனைகளில் திருப்பி செலுத்தும் வசதி

2.விவசாயத்திற்கு உயிர்மூச்சான நீரை பெற அனைத்து ஏரி குளங்கள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் காலவரைப்படி தூர்வாரப்பட்டு பராமரிப்பு செய்யப்படும் மேலும் மழை நீரை பாதுகாத்து நிலத்தடி நீரை செறிவூட்டப் செய்யப்படும் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டி விவசாயம் காக்க இந்த அரசு பாடுபடும்.

3.விவசாய மின் இணைப்புக்கோரி காத்து கிடக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு எவ்வித முன் வைப்புத் தொகையுமின்றி மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்.

4. அனைத்து சிறு விவசாயிகளுக்கும் வருடாந்திர விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் மற்றும் அனைத்து விவசாயிகளும் விதைகள் உரம் மற்றும் பூச்சு மருந்து மகசூல் செய்ய இயந்திரம் வாடகை அனைத்தும் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் அனைத்து மக்களுக்கும் கிடைக்குமாறு சந்தை அமைத்து அரசே விற்பனை செய்யும்.

5. விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு அன்றைய நிலவரப்படி அதிகபட்ச விலை வழங்கப்பட்டு உடனுக்குடன் பண பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் அப்படி வழங்க இயலாத சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளை பங்குதாரர்களாக மாற்றப்படும்.

6. விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் செய்து தருவதுடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு பால் விலை உயர்வு செய்யப்படும்.

7.எல்.கே.ஜி முதல் +12 வகுப்பு வரை அரசுடமையாக்க படும்.

8. சில்லறை வியாபாரிகள் பயன் பெற அரசு அவர்களுக்கு கடன் உதவி செய்து தரப்படும் இதன் மூலம் பல்லாயிரம் சில்லறை வியாபாரிகள் பயன் பெறும்..

9. அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மற்றும் சம்மந்தப்பட்ட பணியாளர்களும் பயன் பெறும் வகையில் இந்த அரசு செயல்படும்.

10. மாணவர்கள் 12ம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் எடுத்து மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை ஒரே முறையில் தேர்ந்தெடுக்கலாம் (மருத்துவம், பொறியியல்,விவாசாயம் கால்நடை மற்றும் இதர படிப்புக்கு தனி தனி கலந்தாய்வு நடத்த தேவை இல்லை மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் விரும்பும் பாட பிரிவுகள் தேர்ந்தெடுக்க முடியும் நீட் மற்றும் இதர தகுதி தேர்வு நீக்கப்படும் நமது மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் இது அனைத்தும் பொருந்தும் இதனால் பெற்றோர்கள் அதிக பொருட்செலவு கால விரயம் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு முற்று புள்ளி வைக்க முடியும்.

11. அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

12. அனைத்து ஏழை மற்றும் நடுத்தர முதியோர்கள் ஓய்வூதியம் மாதம் ரூபாய் 3000 வழங்கப்படும்.

13. தகுதியின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் நீதிபதியாகவும் வயதை 35 முதல் 40 வயதுக்கு மாற்றி சட்டமியற்றப்படும்.

14.சாலை விபத்தில் பாதிக்கப்படும் நபர்களுக்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவ மனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு காப்பீடு தொகையில் அரசே ஏற்று அந்த மருத்துவ மனைக்கு வழங்க வேண்டும்.

15 . அரசு மருத்துவமனை தரம் உயர்த்த பட்டு மக்கள் பயன் பெறும் வகையில் சுகாதார துறை இதற்காக தனி சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும்.

16. பெட்ரோல் & டீசல் சம்பந்தப்பட்ட மாநில அரசின் வரி ரத்து செய்யப்படும்.

17. அனைத்து மாநில அரசு பணியாளர்களுக்கும் மீண்டும் ஓய்வூதிட்டம் செயல் படுத்தப்படும்.

18. அனைத்து காவல்துறை பணியாளர்களுக்கும் 8 மணி நேர பணி வரன்முறை அமுல்படுத்தப்படும் காவல் துறையினர் சங்கம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.

19. அனைத்து நெசவாளர்களும் பயன்பெறும் வகையில் இலவச மின்சாரம் மற்றும் நெசவுத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

20. மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்து மானிய விலையில் டீசல் வழங்கப்படுதுடன் மட்டுமல்லாமல் மீன் பொருட்களை சுகாதார முறையில் இரசாயன கலப்பின்றி மீன்களை பாதுகாக்க பதனிடும் சாலைகள் அமைத்து தரப்பட்டு அரசே கொள்முதல் செய்து குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஆவண செய்யப்படும்.

21. நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு அரசு துறைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும்படி காட்சியகங்கள் அமைத்து விற்பனை செய்யப்படும்.

22. மின் கட்டணத்தை குறைக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் மாதந்தோறும் மின் கட்டணம் கட்ட நிலையான இறதி தேதி நிர்ணயிக்கப்படும்.

23. ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி கோவில் நிலங்களில் உள்ள கடைகளுக்கு 3ஆண்டுக்கு ஒருமுறை மீண்டும் ஏலம் விடபட்டு ஏலம் எடுத்தவர்கள் மட்டுமே கடைகள் நடத்தவும் மேலும் உள்வாடகை விடுவதை தடுக்கப்படும்.

24.கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு நிலையான சம்பளம் கிடைத்திட ஆவண செய்யப்படும்.

25. கோவில் நிலங்களில் உள்ள நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு கோவில் நிர்வாகம் மூலம் நிர்வகிக்க ஏற்ப்பாடு செய்யப்படும்.

26.பத்திரிக்கையாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்ப நல சேமிப்பு திட்டம் அமுல்படுத்தப்படும் 27. போக்குவரத்துத் துறையில் நவீன மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு பாழடைந்த அனைத்து பேரூந்துகள் மாற்றப்பட்டு உரிய உபகரணங்கள் உடனுக்குடன் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டு அனைத்து பேருந்துகள் சீர்திருத்த பண்பும் மேலும் பேருந்து கட்டணம் நியமான கட்டணம் மாற்றப்படும் ஊழல் அனைத்து களையெடுக்க பண்பாடும்.

28. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து சமுதாய மக்களுக்கும் வீடுகள் கட்டிக் கொள்ள ரூபாய் 5லட்சம் மானியமாக வழங்கப்படும்.

29.திரையரங்களில் கேளிக்கை வரி குறைக்கப்பட்டு மக்கள் குறைந்த விலையில் திரைப்படம் காண வழிவகை செய்யப்படும்.

30.ஆட்டோ டிரைவர்களுக்கு நிரந்தர சேம நல ஓய்வூதியம் திட்டம் நிறைவேற்றப்படும். அனைத்து வாகன ஓட்டிகள் இலவச இன்சுரன்ஸ் செய்யப்பட்டு அவர்கள் விபத்தில் இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தின் நலன் கருதி தலா ரூபாய் 20 லட்சம் கிடைக்க திட்டம் அமுல்படுத்தப்படும் இதில் பெருங்காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.

31. நலிவடைந்த கலை மற்றும் பண்பாடு இலக்கியம் சார்ந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் தரப்படும்.

32.சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரம் வரி ரத்து செய்யப்படும்.

33.பேரறிஞர் அண்ணா அவர் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பெயரில் அரசின் சார்பாக தமிழ்நாடு அரசு வங்கி என்ற பெயரில் கிராமங்கள் உட்பட அனைத்து கிராமப்புற பகுதிகளில் அரசு வங்கி கிளைகள் அமைக்கப்படும்.

34.சிறு குறு தொழிற்சாலைகள் நலமுடன் வாழ குறுகிய கால கடன் ரூபாய் 5லட்சம் தமிழ்நாடு வங்கிகள் மூலம் வழங்கப்படும் இதனால் இந்து வட்டி மீட்டர் வட்டி கரண்ட் வட்டி இடி மின்னல் வட்டி அனைத்தும் ஒழிக்கப்படும்.

35.அரசு சம்மந்தப்பட்ட பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கபடமாட்டாது.

36.பொதுதுறை நிறுவனங்கள் மீண்டும் புத்துணர்வு பெறச் செய்து மீண்டும் பொலிவுடன் செயல்பட ஆவண செய்ய படுவதுடன். அனைத்து தொகுதிகளிலும் பொது துறை நிறுவனங்கள் துவங்க ஆவண செய்யப்பட்டு நாட்டிலுள்ள அனைவரின் பொருளாதார தரம் உயர்த்த வழிவகை செய்யப்படும் ஏழைகள் இல்லாத நாடாக மாற்றப்படும்.

37.சார்பதிவாளர் அலுவலகங்களை சீர்படுத்தி அங்கு நடைபெறும் ஊழல்கள் அகற்றப்பட்டு எளிமையான முறையில் குறைவான கட்டணத்தில் பொது மக்களே நேரடியாகத் பத்திர பதிவு செய்ய ஆவண செய்யப்படும்.

38.மக்கள் நலனுக்கு எதிரான மக்கள் உரிமைகளுக்கு எதிராக செயல்படுத்த பட்ட மற்றும் செயல்படுத்த உள்ள திட்டம் அனைத்தும் கைவிடப்படும் மக்கள் அவர்களின் உரிமைகளை காக்கப்படும்.

39.திரைத்துறையின் மானியத்தை 7லட்சம் உள்ளதை 10லட்சமாக உயர்ந்தப்படும்.

40. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர்கள் பணி காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மட்டுமே பணி அமர்ந்தப்படுவார்கள்.

41. பெண்கள் மகப்பேறு காலத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் மகப்பேறு நடந்தால் அறுவை சிகிச்சைக்கான தொகையை அரசே ஏற்றுக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படும் இதனால் ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் அமையும்.

42.மாணவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்த அனைத்து தனியார் கல்லூரியில் அரசு நிர்ணயித்த தொகைமட்டும் வாங்க வேண்டும் அதை மீறினால் அவர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்.

43. IT துறைகளில் பெண்கள் காலை மட்டும் பணி 9மணிமுதல் மாலை 5மணிவரை மட்டுமே பணிபுரிய செய்ய வேண்டும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

44.அனைத்து அரசு கல்லூரிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும்.

45.தற்போது உள்ள சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு முக்கிய பகுதிகளில் 6வழிசாலையாக மாற்றப்படுவதுடன் மட்டுமல்லாமல் தமிழகத்தில் அனைத்து சுங்க சாவடிக்களை அகற்றப்படும்.

அனைத்து பூங்காக்கள் சீரமைப்பு செய்து இயற்கை வளங்கள் காக்கப்படும்